கோவை மாநகராட்சியில்‌ தூய்மைக்கான கணக்கெடுப்பு 2020 பணி குறித்து ஜன., 31ம் தேதி வரை கருத்து பதிவு செய்யலாம்‌ - மாநகராட்சி ஆணையர்‌

கோவை: கோவை மாநகராட்சியில்‌ தூய்மைக்கான கணக்கெடுப்பு 2020 பணியில்‌ பொதுமக்கள்‌ அனைவரும்‌ ஜனவரி 31ம் தேதி வரை கருத்துக்களை பதிவு செய்யலாம்‌ என கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மாநகராட்சியில்‌ தூய்மைக்கான கணக்கெடுப்பு 2020 பணியில்‌ பொதுமக்கள்‌ அனைவரும்‌ ஜனவரி 31ம் தேதி வரை கருத்துக்களை பதிவு செய்யலாம்‌ என கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலக கூட்டரங்கில்‌ ஜனவரி 04 முதல்‌ 31 வரை நடைபெறுகிற தூய்மைக்கான கணக்கெடுப்பு 2020 பணிகள்‌ குறித்து அலுவலர்களுடன்‌ ஆப்வுக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தலைமையில்‌ நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது;-

நாடு முழுவதும்‌ 04.01.2020 முதல்‌ 31.01.2020 வரை தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ்‌ அனைத்து நகரங்களையும்‌ தூய்மையின்‌ அடிப்படையில்‌ தரவரிசை கண்டறியவும்‌ ஸ்வச்‌ சரவேஷன்‌ 2020 இந்திய அரசாங்கத்தின்‌ வீட்டு வசதி மற்றும்‌ நகர்ப்புற விவகார அமைச்சகம்‌ மூலம்‌ நடத்தப்படுகிறது.

எனவே, கோவை மாநகராட்சியின்‌ பொதுமக்கள்‌ அனைவரும்‌ கோவை மாநகரின்‌ தூய்மைக்கான தங்களின்‌ வாக்குகளை 1969 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும்‌, கைபேசியில்‌ Swachh Survekshan 2020 (APP) செயலி வாயிலாகவும்‌, http://swachhsurvekshan2020.org/CitizenFeedback என்ற இணையதளத்திலும்‌ பதிவு செய்யலாம்‌ எனவும்‌, மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளிலும்‌ தூய்மைப்‌ பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌ துரிதமாக மேற்கொள்ள வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில்‌, மாநகர பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, நகர்நல அலுவலர்‌ கே.சந்தோஷ்குமார்‌, மண்டல உதவி ஆணையர்கள்‌ தி.ரா.ரவி, செந்தில்குமார்ரத்தினம்‌, மகேஷ்கனகராஜ்‌, ஏ.ஜே.செந்தில்‌அரசன்‌, உதவி ஆணையர்‌ (வருவாய்‌) அண்ணாதுரை உதவி ஆணையர்‌ (பணியமைப்பு) ம.சுந்தாராஜன்‌, உதவி ஆணையர்‌ (கணக்கு) சரவணன்‌, செயற்பொறியாளர்‌ சரவணக்குமார்‌, தூய்மை பாரத இயக்க திட்ட ஒருங்கிணைப்பாளர்‌ திருமால்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...