கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நகை அடகு நிறுவனத்தில் கூடுதலாக நிர்வாகத்திற்கு கணக்கு காட்டி பல லட்சம் ரூபாய்களை மோசடி செய்த சம்பவத்தில் மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது பூரம் ஃபின்சர்வ் நகை அடகு நிறுவனம். இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான கிளை நிறுவனம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இயங்கி வருகிறது. இந்த கிளையில் கடந்த சில மாதங்களாகவே கணக்குகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு குறைந்த தொகையை கொடுத்துவிட்டு நிறுவனத்தின் கணக்கில் அதிக தொகை பதிவு செய்வதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, வட்டார மேலாளர் தயானந்தன் அளித்த புகாரின் பேரில், கிளை மேலாளர் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த லட்சுமி, நகை மதிப்பீட்டாளர் பாலக்காட்டைச் சேர்ந்த பிஜூ ஆகியோரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் வாடிக்கையாளர்களின் 5081 கிராம் தங்க நகைகளில், 4650 கிராம் மட்டும் இருந்ததும், சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1150 கிராம் தங்க நகைகள் மாயமானதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், குற்றத்தில் தொடர்புடைய அதே கிளை நிறுவனத்தைச் சேர்ந்த சுபா, விக்னேஷ் ஆகிய இருவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.