கோவை: கோவை சரக பணியிடை பயிற்சி மையம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் இணைந்து காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாலின விகிதாச்சார வருடாந்திர வரவு செலவு திட்டம் (Gender Budgeting) சம்பந்தமாக மூன்று நாள் பயிற்சியின் தொடக்க விழா இன்று கோவை சரக பணியிடை பயிற்சி மையத்தில் (In-service Training Centre) நடைபெற்றது.

இதில் கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் க.கார்த்திகேயன் துவக்கி வைத்து பயிற்சியாளர்களுக்கு பயிற்சி சம்மந்தமாகவும், பாலின சமன்பாடு குறித்தும் அறிவுரை வழங்கினார். இந்த மூன்று நாள் பயிற்சியில் பாரதியார் பல்கலைக்கழக மகளிரியல் துறை பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் மூலம் பாலின சமன்பாடு, பாலின ரீதியான நிதி பங்கீடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு வகையான நலத்திட்டங்கள் சம்மந்தாக பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இவ்விழாவில் பாரதியார் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் முனைவர்.ஜெனிட்டா ரோசலின், பொருளாதார துறை பேராசிரியர், முனைவர் ஏ.சங்கமித்ரா பணியிடை பயிற்சி மைய துணைக்காவல் கண்காணிப்பாளர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் இறுதியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், உதவி பேராசிரியருமான முனைவர்.கே.மங்கையர்கரசி நன்றியுரை வழங்கினார். இப்பயிற்சி வகுப்பில் கோவை சரகத்திற்குட்பட்ட கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர் மாநகரத்தை சேர்ந்த 44 காவல் அதிகாரிகள் பயிற்சியில் பங்கேற்றனர்.