பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு..! ரஜினி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் விடுதலை கழகத்தினர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

கோவை: தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பிய நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகத்தினர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கோவை: தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பிய நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகத்தினர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி 14ம் தேதி சென்னையில் துக்ளக் இதழின் ஐம்பதாம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டில் சேலத்தில் பெரியார், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் கொண்டு போனார்கள் என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.

இது திராவிட சிந்தனையாளர்கள் மத்தியில் ரஜினி மீது எதிர்ப்பாக கிளப்பியது. அதேபோல சமூக வலைதளங்களில் ரஜினியின் பேச்சு விஷமம் உள்ளது எனவும் பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளது எனவும் கண்டனங்கள் கிளம்பியது.

இந்த நிலையில், கடந்த 17ம் தேதி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் மாநகரத் தலைவர் நேரு தாஸ் புகார் மனு ஒன்று அளித்தார். இதை தொடர்ந்து புகார் மனு தொடர்பாக காட்டூர் போலீசார், புகார்தாரர் நேரு தாஸிடம் சி.எஸ்.ஆர் அளித்தனர். ஆனால், இதுவரை முதல் தகவல் அறிக்கை பதியப்படாததால் புகார்தாரர் நேரு தாஸ் உயர்நீதிமன்றத்தில் ரஜினி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் காட்டூர் காவல் ஆய்வாளர் ஆகியோர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளனர். கோவை காட்டூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...