வாக்குறுதிகளை நிறைவேற்றிவிடலாம் வாருங்கள்..! ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

கோவை: உள்ளாட்சி துறையில் ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தலின் போது நிறைய வாக்குறுதிகள் மக்களுக்கு கொடுத்து இருப்பீர்கள், அதை என்னிடம் சொல்லுங்கள் நிறைவேற்றிவிடலாம் என உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.


கோவை: உள்ளாட்சி துறையில் ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தலின் போது நிறைய வாக்குறுதிகள் மக்களுக்கு கொடுத்து இருப்பீர்கள், அதை என்னிடம் சொல்லுங்கள் நிறைவேற்றிவிடலாம் என உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளின் தலைவர் மற்றும் துணை தலைவர்கள் கலந்து கொண்டனர்.



இந்த முகாமில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு ஊராட்சிமன்ற தலைவர், துணை தலைவர்களுக்கு பயிற்சி ஏடுகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், ஊரக உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது எனவும், பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனையின் பேரில் அமல்படுத்தும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது என்ற அமைச்சர் வேலுமணி, ஊராட்சிகளில் சாலை மேம்பாடு, சுகாதாரம், பாலங்கள் அமைத்தல் உட்பட பல்வேறு அடிப்படை தேவைகளை தீர்த்து வைக்கும் பணிகளை ஊராட்சி தலைவர், துணை தலைவர்களால் சிறப்பாக செய்ய முடியும் எனவும் மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் பொறுப்பு ஊராட்சி தலைவர், துணை தலைவர்களுக்கு உண்டு என்றார்.

பேரூராட்சி தலைவராக இருந்த போது நேரடியாக மக்களை சென்று பார்ப்பேன் எனவும், அதனால் துப்புரவு பணியாளர்கள், ஊழியர்கள் சரியான நேரத்திற்கு வந்து விடுவார்கள் என தனது அனுபவத்தை கூறிய அமைச்சர், நீங்களும் இது போன்று மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்றவர், உள்ளாட்சி துறையில் ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தேர்தலின் போது நிறைய வாக்குறுதிகள் மக்களுக்கு கொடுத்து இருப்பீர்கள், அதை என்னிடம் சொல்லுங்கள் நிறைவேற்றிவிடலாம் என்று கூறினார்.

மேலும், தமிழகம் முழுவதும் 50 லட்சம் தனிநபர் கழிப்பிடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது என கூறிய அவர், கங்கையை சுத்தம் செய்ய தமிழக அதிகாரிகளிடம் தான் பயிற்சி பெற்று செல்கின்றனர், அந்தளவு திறமையான அதிகாரிகள் தமிழகத்தில் இருக்கின்றனர் எனவும் மழைநீர் சேகரிப்பில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்திய அவர், குடிநீர் பிரச்சினை அதிகமாக வரும் சூழ்நிலையில் மழைநீர் சேகரிப்பில் கவனம் செலுத்தினால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று கூறினார். பிளாஸ்டிக் ஒழிப்பில் ஊராட்சி தலைவர், துணை தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நிதி ஆதாரத்தை உயர்த்தவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...