கோவை: மேட்டுப்பாளையம் அருகே மளிகைக்கடையை உடைத்து திருடிய கும்பலை உள்ளூர் இளைஞர்கள் சுற்றிவளைத்துப் பிடித்த நிலையில், தொடர் திருட்டை தடுக்க தவறிய காவல்துறையின் மெத்தனப்போக்கை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை அருகே உள்ள சின்னதொட்டிப்பாளையம் கிராமத்தில் கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக இரவு மற்றும் பகல் நேரங்களில் ஆளில்லா வீடுகளை நோட்டமிட்டு ஒரு கும்பல் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளது.
இதுவரை 5க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் ஆகியவற்றில் நுழைந்து திருடிவந்துள்ளனர். மேலும், கால்நடைகளையும் திருடிவந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் புகார் அளித்தும் போதிய நடவடிக்கை இல்லாததால் உள்ளூர் இளைஞர்களே இணைந்து இந்த திருடர்களை பிடிக்க தினசரி இரவு நேரங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை மூன்று மணியளவில் சின்னதொட்டிப்பாளையம் கிராமத்தில் டாட சுமோ வாகனத்தில் வந்த ஜந்து பேர் கொண்ட திருட்டு கும்பல் காரமடை தொட்டிப்பாளையம் சாலையில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவரது மளிகை கடையை உடைத்து அதில் இருந்த பொருட்களையும் பணத்தையும் கொள்ளையடித்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்துள்ளனர். இதனை கண்ட உள்ளூர் இளைஞர்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு அனைவரும் தப்பி ஓட முயன்றுள்ளனர். பின்னர் அவர்களை பின் தொடர்ந்து துரத்திய இளைஞர்கள் ஒரு கொள்ளையனை மட்டும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து தகவலறிந்து ஒன்றிணைந்த கிராம மக்கள், கொள்ளையர்கள் வந்த வாகனத்தை அடித்து நொறுக்கினர். பின்னர் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து தொட்டிப்பாளையம் கிராம மக்கள், தென் திருப்பதி நால்ரோடு பகுதியில் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காரமடை போலீசார், இனி இதுமாதிரியான திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து ரோந்து பணியினை தீவிரப்படுத்தப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், பிடிபட்ட கொள்ளையனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அன்னூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பதும் பல இடங்களில் இவனும் இவனது கூட்டாளிகளும் சேர்ந்து பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.