கோவையில் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் காலணிகளை குறிவைத்து திருடும் சைக்கோ திருடன்..! சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை

கோவை: கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட துடியலூர் பகுதியில் உள்ள மீனாட்சி கார்டனில் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் பெண்களின் செருப்புக்களை மட்டும் குறிவைத்து திருடும் சைக்கோ திருடன் குறித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.


கோவை: கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட துடியலூர் பகுதியில் உள்ள மீனாட்சி கார்டனில் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் பெண்களின் செருப்புக்களை மட்டும் குறிவைத்து திருடும் சைக்கோ திருடன் குறித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.



கோவை மாவட்ட காவல் துறைக்கு உட்பட்ட துடியலூர் காவல் எல்லையில் உள்ள மீனாட்சி கார்டனில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர். இந்தக் குடியிருப்புகளில் சமீபகாலமாக காலணிகள் மற்றும் பெண்களின் உள்ளாடைகள் மர்மமாக திருட்டுப் போய் வந்தது.



கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பல்வேறு குடியிருப்பில் இருந்து ஓரே நேரத்தில் உள்ளாடைகளும் செருப்புகளும் காணாமல் போனதை அடுத்து தேடி பார்த்த போது ஆளில்லாத ஒரு வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



இந்நிலையில் கடந்த 17ம் தேதி மீண்டும் இது போன்று பெண்களின் உள்ளாடைகள், செருப்பு போன்றவை திருடப்பட்டது. இதைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது திருடன் வந்து திருடி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. 

இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...