கோவை சி -2 பந்தய சாலை காவல் நிலையம் தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையமாக தேர்வு..!

கோவை: கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சி -2 பந்தய சாலை (Race Course) காவல் நிலையம் மாநில அளவில் சிறந்த காவல்நிலையத்திற்க்கான தகுதியில் முதல் இடத்தை பிடித்துள்ளது.


கோவை: கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சி -2 பந்தய சாலை (Race Course) காவல் நிலையம் மாநில அளவில் சிறந்த காவல்நிலையத்திற்க்கான தகுதியில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் நாட்டில் சிறந்த பத்து காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதானது கடந்த 2017 ஆம் ஆண்டு கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட ஆர் எஸ் புரம் காவல்நிலையத்திற்கு வழங்கப்பட்டது.



இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டிற்க்கான விருதுகள் பெற கோவை மாநகரில் உள்ள சி-2 பந்தய சாலை காவல் நிலையமும், போத்தனூர் டி-3 காவல் நிலையமும் தயாராகியது.



இதில் குறிப்பாக சி-2 காவல் நிலையத்தில் புகார் தர வரும் பொது மக்களை வரவேற்கும் வகையில் வரவேற்பறையில் இருந்து, சுத்திகரித்த குடிநீர், குழந்தைகள் விளையாடும் வகையில் காப்பகம், தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, காவலர்களுக்கு ஓய்வரை, பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனி லாக்கப், குற்ற பதிவேடுகளை காக்கும் அரை என பல்வேறு வசதிகள் செய்யபட்டது.



இப்படியிருக்க, தற்போது 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக கோவை பந்தய சாலை காவல் நிலையம் மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது கோவை மாநகர காவல் துறையினர் மத்தியிலும் கோவை மாநகர பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...