கோவை: கோவை மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் நாளை துவக்கி வைக்க உள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் ஆகியோர்களுக்கு நாளை (22.01.2020) ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
மேலும், இம்முகாமில் அரசிலமைப்பு ஆணைகள், பொறுப்புகள் மற்றும் உள்ளாட்சிகளுக்கான நிர்வாக அதிகாரம், அரசால் செயல்படுத்தப்படும் முதன்மை திட்டங்கள், குடிமை செயல்பாடுகள் குறித்தும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் ஆகியோர் தங்களது பணியை சிறப்புடன் செய்வதற்கும், மிகச் சிறந்த உள்ளாட்சி நிர்வாகத்தினை மேற்கொள்வதற்கும் இப்பயிற்சி முகாம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
இம்முகாமில் தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் அவர்கள் பயிற்ச்சி முகாமை துவக்கி வைத்து விழா பேரூரை ஆற்றவும், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் அவர்கள் முன்னிலையுரை ஆற்றவும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்கவும், ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநர் சென்னை (மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்) திருமதி.ஜி.முத்தும்னாள் அவர்கள் திட்ட விளக்கவுரை அளிக்கவும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் என பலரும் கலந்து கொள்ள உள்ளார்கள்.