கோவை அவினாசி சாலையில் வரும் பிப்., 2ம் தேதி நடைபெற இருந்த இஸ்லாமிய அமைப்புகளின் பேரணிக்கு அனுமதி மறுப்பு

கோவை: மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் பிப்ரவரி 2ம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடத்த இருந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

கோவை: மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் பிப்ரவரி 2ம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடத்த இருந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கோவை மாநகர போலீசார் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மத்திய அரசின்‌ குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, வருகின்ற 02.02.2020 ஆம்‌ தேதி கோவை வ.உ.சி., மைதானத்திலிருந்து, கொடிசியா வரை பேரணி நடத்த அனுமதி கோரி, கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்‌ மற்றும்‌ இஸ்லாமிய இயக்கங்களின்‌ கூட்டமைப்பின்‌ ஒருங்கிணைப்பாளர்‌ ராஜா உசேன்‌ என்பவர்‌ மனு கொடுத்திருந்தார்‌.

மேற்படி மனு குறித்து முஸ்லீம்‌ அமைப்புகளின்‌ நிர்வாகிகள்‌ மற்றும்‌ ஜமாத்‌ நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து கலந்து கொண்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில்‌ அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

அனைத்து ஜமாஅத்கள்‌ சார்பில்‌ ஆர்ப்பாட்டம்‌, பொதுக்கூட்டம்‌, பேரணி, மனித சங்கிலி அணிவகுப்பு, துண்டுபிரசுரம்‌ விநியோகம்‌, கடையடைப்பு போராட்டம்‌ மற்றும்‌ தெருமுனை பிரச்சாரம்‌ போன்ற 50க்கும்‌ மேற்பட்ட போராட்டங்கள்‌ மாநகரின்‌ பல்வேறு இடங்களில்‌ ஏற்கனவே நடைபெற்றுள்ளன. மேலும்‌ வருகின்ற 02.02.2020 ஆம்‌ தேதி நடத்திட அனுமதி கோரியுள்ள அவினாசி சாலை மாநகரின்‌ அதிகப்படியான போக்குவரத்து பயன்பாடுள்ள சாலை எனவும்‌ மேம்பாலப் பணிகளால் அனைத்து வாகனங்களும் அவிநாசி ரோட்டை பயன்படுத்தி வருகின்றன. உயர் நீதிமன்றம், அனைத்து விதமான போராட்டங்களும் புறநகரில் நடத்தப்பட வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது. அவிநாசி ரோட்டில் பேரணி நடத்தினால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதைக்கருத்தில் கொண்டு, பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...