திருநர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ஒருவருக்கு ஒரு பைசா கூட சேரவில்லை - நிறங்கள் அமைப்பின் உறுப்பினர் சிவா

கோவை: திருநர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ஒருவருக்கு ஒரு பைசா கூட சேராத வகையில் உள்ளதாக நிறங்கள் அமைப்பின் உறுப்பினர் சிவா தெரிவித்துள்ளார்.

கோவை: திருநர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ஒருவருக்கு ஒரு பைசா கூட சேராத வகையில் உள்ளதாக நிறங்கள் அமைப்பின் உறுப்பினர் சிவா தெரிவித்துள்ளார்.



கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் மாற்று பாலினத்தோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த பத்திரிகையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிறங்கள் இனை நிறுவனர் சிவா, நிர்வாக குழு உறுப்பினர் செல்வம்,டெல்பினா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, பாலினம் என்பது என்ன? ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்களும் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், ஓரின சேர்க்கையாளர்கள், மனநிலை திருநம்பிகளின் தேவைகள் அவர்கள் எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கலந்துரையாடப்பட்டது.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிறங்கள் அமைப்பின் சிவா கூறுகையில், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாற்றுப் பாலின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், மன வேதனைகள் ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும் இந்த நிகழ்வானது ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்றார்.

மேலும், பால், பாலினம், பால் ஈர்ப்பு போன்றவை குறித்து மக்களிடையே புரிதல் இல்லை எனவும் அவர்கள் மனநிலை திருநர் குறித்து இழிவாக உள்ளதாக தெரிவித்தார். உலகிலேயே தமிழகத்தில் தான் முதல் முறையாக திருநங்கைகளுக்கான நலவாரியம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் துவங்கப்பட்டது எனவும் மத்திய அரசு திருநங்கைகளுக்கு வழங்கும் சலுகைகளை திருநம்பிகளுக்கு வழங்குவதில்லை என வேதனை தெரிவித்தார்.

அரசு தரப்பில் திருநம்பிகளுக்கும் உரிய சலுகைகள் வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது எனினும் தங்களை அடையாளப் படுத்தி கொள்ள இதுவரை அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை எனவும் உடனடியாக இதனை வழங்கிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், மத்திய அரசு ஒதுக்கிய 2019 பட்ஜெட்டில் திருநர்களுக்கு ஒருவருக்கு ஒரு பைசா கூட சென்று சேராதவாறு ஒதுக்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பல்வேறு ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...