கோவை: கனிம வளங்களை கொள்ளையடிக்கும் செங்கல் சூளைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதை காரணம் காட்டி தங்களுக்கும் நக்சலைட்டுகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுடன் வரவு செலவு கணக்கு வைத்திருப்பதாகவும் சமூகவலைதளத்தில் பரப்பிவரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர் கணேசன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
கோவை: கனிம வளங்களை கொள்ளையடிக்கும் செங்கல் சூளைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதை காரணம் காட்டி தங்களுக்கும் நக்சலைட்டுகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுடன் வரவு செலவு கணக்கு வைத்திருப்பதாகவும் சமூகவலைதளத்தில் பரப்பிவரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர் கணேசன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
கோவை தடாகத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பல வருடங்களாகவே சட்டவிரோதமாக செம்மண் கொள்ளை நடைபெற்று வருகிறது. இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சமீபகாலமாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. அதேபோல, சட்டவிரோதமாக கனிம வளத்தை கொள்ளையடிக்கும் செங்கல் சூளை அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர் கணேசன் பல்வேறு கட்ட சட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளார்.
இந்நிலையில், சமீபகாலமாக வாட்ஸ்அப்பில் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் ராஜேந்திரன் மற்றும் கணேசன் ஆகியோர் நக்சலைட்டுகளிடம் பணம் பெற்றுக்கொண்டு செங்கல் சூளை எதிர்ப்பு போராட்டம் நடத்தி வருவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் பொய்யான தகவல்களை பரப்பி எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கணேசன் மற்றும் ராஜேந்திரன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது;-

நாங்கள் வசித்து வரும் தடாகம் பகுதிகளில் செங்கல் சூளைகள் சம்பந்தமாக கனிமவளக் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதனால் எங்கள் வாழ்க்கையின் வாழ்வாதாரமும், எங்களது வருங்கால சந்ததிகளின் உயிர் வாழ்வாதாரங்களும் மிகக் கொடூரமான நோயால் தாக்கப்பட்டு அழிந்து கொண்டிருப்பதால் இயற்கை வளங்களையும் இயற்கையை சார்ந்து வாழக்கூடிய வன விலங்குகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் பதிவு தபாலில் புகார் அளித்தோம்.
இதை தொடர்ந்து எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளோம். இந்த சூழலில் கடந்த 20ம் தேதி எனது அலைபேசி எண்ணிற்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும், நாங்கள் அவர்களிடம் வரவு செலவு வைத்து கைக்கூலிகளாக இருப்பதாகவும் பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆகவே பொய்யான தகவல்களை பரப்பிவரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் துடியலூர் காவல் ஆய்வாளருக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.