திருப்பூரில் ரஜினி உருவ பொம்மையை எரிக்க முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் கைது

திருப்பூர்: பெரியாரை அவதூறாக பேசிய நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் இன்று காலை ரஜினியின் உருவ பொம்மை எரிக்க முயற்சி செய்தனர்.

திருப்பூர்: பெரியாரை அவதூறாக பேசிய நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் இன்று காலை ரஜினியின் உருவ பொம்மை எரிக்க முயற்சி செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக துக்ளக் நிகழ்ச்சியில் பெரியார் குறித்து அவதூறாக பேசிய நடிகர் ரஜினியை கண்டித்து தமிழகம் முழுவதும் திராவிட கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை திருப்பூர் ரயில்நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் ரஜினியின் உருவ பொம்மை எரிக்க முயற்சி செய்தனர்.



ஆனால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வடக்கு போலீசார், போராட்டக்காரர்களிடம் இருந்த உருவ பொம்மையை பிடுங்கிச் சென்றனர். 



இதனால், ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் சுமார் 30 பேர் பேரவையின் மாவட்ட செயலாளர் வேந்தன் மகேஷ் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...