கோவை: 31வது சாலை பாதுகாப்பு வார விழாவின் இரண்டாம் நாள் வாக்கத்தான் நிகழ்ச்சியில் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

31வது சாலை போக்குவரத்து வார விழா தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று வாக்கத்தான் பேரணியை மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார் துவக்கி வைத்தார்.

இதில் இந்திய விமான படையினர், கங்கா நர்சிங் கல்லூரி, ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, சி.ஐ.டி கல்லூரி, ராமகிருஷ்ண கலை அறிவியல் கல்லூரி, அனைத்திந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்கம், அம்பாள் ஐ.டி.ஐ மாணவர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் என 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வ.ஊ.சி மைதானத்தில் துவங்கிய இந்த பேரணி, அவினாசி சாலை வழியாக, குப்புசாமி நாயுடு மருத்துவமனை வரை சென்று மீண்டும் வ.ஊ.சி மைதானத்தை வந்து நிறைவு பெற்றது. இந்த பேரணியில் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர்,வடக்கு வட்டார அலுவலர் குமாரவேல், தெற்கு வட்டார அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர், வடக்கு வட்டார அலுவலர் குமாரவேல், தெற்கு வட்டார அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.