நீலகிரி: நீலகிரி மாவட்டம் மேலூர் ஆருக்குச்சி வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையில் உலா வரும் சிறுத்தையால் வாகன ஓட்டிகளும் அப்பகுதி பொதுமக்களும் அச்சமடைந்துள்ள நிலையில், அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் மேலூர் பகுதியில் பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக யானை, கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது வழக்கம்.
இந்நிலையில் மேலூர் பகுதியில் முக்கிய சாலையில் இன்று அதிகாலை சுற்றித்திரிந்த சிறுத்தையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். அசம்பாவிதங்கள் நடக்கும் முன் இந்த சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என பொதுமக்கள் காேரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டம் கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.