கோவை: கோவையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2000 அபராதம் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

அன்னூர் அருகம்பாளையம் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு 16 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகக் கோபி அருகே உள்ள செம்மாண்டம் பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(27) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
குன்னத்தூர்புதூர் பகுதியில் தங்கி கிடைக்கும் வேலையை செய்து வந்த சதீஷ்குமார், மாணவியை அடிக்கடி பின்தொடர்ந்து சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். இந்நிலையில், கடந்த 15.2.2017ம் தேதி இரவு 11.30 மணியளவில் மாணவி தனது வீட்டின் அருகில் இருந்த விவசாய தோட்ட மோட்டாரை அணைக்க சென்ற போது, சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் மாணவியை ஓதிமலை பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சதீஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கினார்.