கோவை அவிநாசி சாலையில் சென்ற நான்கு சக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு..!

கோவை: கோவையில் சாலையில் சென்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்த எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் சாலையில் சென்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்த எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடுபுதூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், அவரது டெம்போ டிராவலர் பழுதடைந்து இருந்ததால் அதனை சரி செய்ய நீலாம்பூரில் உள்ள ஒரு வொர்க் ஷாப்பிற்கு ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது, அவிநாசி சாலை வழியாக பீளமேடு சர்தர் வல்லபாய் படேல் ஜவுளி தொழில்நுட்ப கல்லூரி அருகே வந்த போது, வண்டியின் முன்பக்கம் புகை வந்துள்ளது. இதனை பார்த்த முருகன் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி கீழிறங்கி பேனட்டினை திறந்து வெயர்களை வெட்ட முயன்றுள்ளார். அதற்குள் தீ மளமளவென வாகனம் முழுவதும் பரவியது. இதில் டெம்போ டிராவலர் எரிந்து சேதமடைந்தது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து பீளமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் நிறைந்த அவிநாசி சாலையில் டெம்போ டிராவலர் வாகனம் தீக்கிரையான சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...