திருப்பூர்: திருப்பூரில் 31-வது சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துறையின் சார்பில் ஆண்டு தோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தாண்டு 31வது சாலை பாதுகாப்பு வார விழா இன்று முதல் வரும் 27ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படவுள்ளது.

முதல் நாளான இன்று திருப்பூர் மாநகர காவல்துறை மற்றும் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. இப்பேரணியானது பல்லடம் சாலை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் துவங்கி, நகரின் முக்கிய சாலைகளின் வழியாக பழைய மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தினை வந்தடைந்தது.

இந்த பேரணியில் காவல்துறையினர், போக்குவரத்துத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.