கோவை: வால்பாறை நகராட்சி குப்பை கிடங்கில் சமூக விரோதிகளால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து வரும் புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் குப்பை கிடங்கு ஸ்டான்மோர் சாலையில் உள்ளது. வால்பாறை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு சேமிக்கப்படுகின்றன. இந்த குப்பை கிடங்கின் அருகில் அரசு கலை அறிவியல் கல்லூரி, நீதிமன்றம், புதிய பேருந்து நிலையம் மற்றும் சிறுவர் பூங்கா கக்கன் காலனி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்த குப்பை கிடங்கில் கொட்டப்படும் டயர்களில் உள்ள இரும்பு கம்பிகளை எடுப்பதற்காக சமூக விரோதிகள் தீ வைத்து விடுகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலையில் சமூக விரோதிகளால் வைக்கப்பட்ட தீ எரிந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
மேலும், அருகில் உள்ள கல்லூரி மாணவர்கள், குடியிருப்பு வாசிகளுக்கு மூச்சுத்திணறல் மற்றும் சுவாச நோய்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சாலைகளில் செல்லும் மக்களும் பெரிதும் பாதிப்படைகின்றனர். குப்பைகளுக்கு தீ வைக்கும் நபர்கள் மீது நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.