மேட்டுப்பாளையத்தில் 31வது சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன பேரணி

கோவை: மேட்டுப்பாளையத்தில் 31வது சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.


கோவை: மேட்டுப்பாளையத்தில் 31வது சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக தமிழக அரசு சார்பில் 31வது சாலைப் பாதுகாப்பு வார விழா ஜனவரி 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவது, விபத்தில்லா தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கும் வகையில் இன்று பல்வேறு இருசக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது



தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட இரு சக்கர வாகனப் பேரணியில் மகளிர் சுய உதவிக் குழு, தமிழ்நாடு ஊர்காவல் படை, போக்குவரத்து காவல்துறையினர் உட்பட பலர் பங்கேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் கலந்து கொண்ட இந்த பேரணியை மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சென்னகேசவன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து துவங்கிய இந்த பேரணி, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், போக்குவரத்து ஆய்வாளர் மாலதி, போக்குவரத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...