மேட்டுப்பாளையம் யானைகள் முகாமிற்கு ரஷ்ய கலை குழுவினர் வருகை; மவுத் ஆர்கன் வாசித்து உற்சாகப்படுத்திய ரெட்டை திருப்பதி யானை

கோவை: மேட்டுப்பாளையம் அருகே கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாமில் ரெட்டை திருப்பதி யானை மவுத் ஆர்கன் வாசிப்பதை ரஷ்ய குழுவினர் கண்டு ரசித்தனர்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாமில் ரெட்டை திருப்பதி யானை மவுத் ஆர்கன் வாசிப்பதை ரஷ்ய குழுவினர் கண்டு ரசித்தனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 15ம் தேதி துவங்கிய இந்த முகாமில் 28 யானைகள் பங்கேற்றுள்ள நிலையில் இந்த முகாமினை காண்பதற்கு ரஷ்யா நாட்டு கலாச்சார நடனக்குழுவினர் வருகை தந்தனர்.

இந்திய ரஷ்யா கலாச்சார நட்புறவு கழகம் சார்பில் கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அந்த குழு, மேட்டுப்பாளையம் யானைகள் நலவாழ்வு முகாமிற்கு வருகை புரிந்து கண்டு ரசித்தனர். முகாமிற்கு வந்த ரஷ்ய கலைஞர்களை முகாம் நிர்வாகிகள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்

மிகவும் குளிர்பிரதேசமான ரஷ்யாவில் யானைகள் என்பதே இல்லாத நிலையில், இதுவரை பாட புத்தகங்களிலும் புகைப்படங்களில் மட்டுமே கண்ட பேருயிரினமான யானையை ரஷ்யா குழுவினர் மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். மேலும், முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் குளிப்பது, உணவு உண்ணுதல், அசைபோடுதல் மற்றும் அவைகள் செய்யும் குறும்புத்தனத்தைப் பார்த்து ரசித்தனர். மேலும் யானை குளிப்பாட்டும் இடங்களையும் பார்வையிட்ட அக்குழு பாகன்களுடன் இணைந்து யானைகளை குளிக்க வைத்தனர்.



இதனையடுத்து, முகாமில் கட்டிவைக்க பட்டிருந்த யானை ரெட்டை திருப்பதி, லட்சுமி, ரஷ்ய நாட்டு குழுவினரை வரவேற்கும் விதமாக மவுத்ஹர்கன் வாசித்து அவர்களை உற்சாகப்படுத்தியது ,யானையையே கண்டிராத ரஷ்யா குழு யானையின் இந்த திறமையை பாராட்டியதுடன் அந்த யானையுடன் நின்று தனித்தனியே மற்றும் குழுவாக புகைப்படமும் எடுத்து கொண்டனர்

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...