திருப்பூர்: திருப்பூரில் உடலில் வெட்டுகாயங்களுடன் அழுகிய நிலையில் பனியன் தொழிலாளியின் சடலம் கண்டெடுத்த சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள முட்புதரில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி சோதனை மேற்கொண்டதில், உயிரிழந்த வாலிபரின் உடலின் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததோடு, கொலை நடந்து இரண்டு நாட்கள் இருக்கக்கூடும் என தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த வாலிபர் திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகர் பகுதியை சேர்ந்த அருண் குமார் (23) என்பதும், இவர் குடும்பத்தோடு அதே பகுதியில் தங்கிக் கொண்டு, அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும், கடந்த வெள்ளிக்கிழமை வேலை சென்றவர் வீடு திரும்பாத நிலையில் நேற்று வெட்டுகாயங்களுடன் சடலமாக இருந்தவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக கொலை நடந்ததா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்