கோவை வெள்ளலூர் பகுதியில் இலவச மருத்துவ சேவை மையத்துடன் கூடிய புதிய பள்ளிவாசல் திறப்பு

கோவை: கோவை அடுத்த வெள்ளலூர் பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் சாதி, மத வேறுபாடின்றி இலவச தையல் தொழிற்பயிற்சி மையத்துடன் சுயதொழில் செய்ய உதவும் நோக்குடனும், இலவச மருத்துவ சேவை மையத்துடன் கூடிய புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது.

கோவை: கோவை அடுத்த வெள்ளலூர் பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் சாதி, மத வேறுபாடின்றி இலவச தையல் தொழிற்பயிற்சி மையத்துடன் சுயதொழில் செய்ய உதவும் நோக்குடனும், இலவச மருத்துவ சேவை மையத்துடன் கூடிய புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது.



கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவை நகரின் பல பகுதிகளிலிருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேலான குடும்பங்கள் வெள்ளலூரில் அமைந்துள்ள தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் குடியமர்த்தப்பட்டனர்.



அவர்கள் தங்களது மத ரீதியான அடிப்படைக் கடமைகளான தொழுகை, சிறுவர்களுக்கான மத்ரஸா போன்றவைகளை பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் இந்த பகுதியில் "மஸ்ஜிதுல் முஹாஜிரீன்" எனும் பெயரில் பள்ளிவாசல் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பள்ளிவாசலின் திறப்பு விழா பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.



ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழகத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பஈ மற்றும் ஜனாப். ஹுசைன் தீனார் ஆகியோர் இந்த பள்ளிவாசலை திறந்து வைத்தனர். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் கோவை மாநகரத் தலைவர் ஜனாப். P.S. உமர் ஃபாரூக் அவர்கள் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...