கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வரும் 31ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - நா.கார்த்திக் எம்எல்ஏ

கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 31ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 31ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தெரிவித்துள்ளார். 



கோவை தெப்பக்குளம் மைதானம் முத்தமிழறிஞர் கலைஞர் நூலகத்தில் கோவை மாநகர் மாவட்ட திமுகவின் நிர்வாக குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கோவை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து கோவை மாநகராட்சியை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்துவது, பொது ஒதுக்கீட்டு இடங்களில் திடக்கழிவு மேலாண்மை மூலம் குப்பை மேடாக மாற்றும் மாநகராட்சியின் முடிவிற்கு கண்டனம் தெரிவிப்பது, கோவை மாநகராட்சியின் குடிநீர் வினியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியதை கண்டித்து வரும் 31ம் தேதி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...