கோவை: கோவை எருக்கம்பெனி பகுதியிலுள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றும் பெண்களின் உடைமாற்றும் வீடியோவை ஊடகங்களில் வெளியிட காரணமாக இருந்த மூன்று பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: கோவை எருக்கம்பெனி பகுதியிலுள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றும் பெண்களின் உடைமாற்றும் வீடியோவை ஊடகங்களில் வெளியிட காரணமாக இருந்த மூன்று பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண்
உத்தரவிட்டுள்ளார்.
கோவை கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்த தம்பதிகள் மணிகண்டன் (35) மற்றும் சவிதா(30). இவர்கள் எருக்கம்பெனி பகுதியில் உள்ள ரூட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பெட்ரோல் பங்கில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சவிதா தாங்கள் பணி புரிந்து வரும் பெட்ரோல் பங்கில் உள்ள அறையில் உடைமாற்றி கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு ரகசியமாக வீடியோ எடுப்பது போன்று தெரிந்துள்ளது. இதையடுத்து அவர் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் கணவர் மணிகண்டன் சூப்பர்வைசர் சுபாஸ் மீது புகார் தெரிவித்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு பின் புகார் விலக்கிக் கொள்ளப்பட்டது. அதேபோல, பெட்ரோல் பங்கில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் தராததால் வழக்கு எதுவும் பதியப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுபாஷ் என்பவரால் பெட்ரோல் பங்கில் எடுக்கப்பட்ட வீடியோ ஊடகங்களில் பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 354(c),66(e),67(a) தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000,4- பெண்களுக்கு எதிரான குற்றம் 2002,3,4&6 இண்டீசன்ட் ரெப்பெரசன்சேசன் ஆப் வுமன் ஆக்ட்1986 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், வீடியோ விவகாரம் தொடர்பாக வீடியோவை எடுத்த சுபாஷ், ஊடகத்தில் வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மருதாச்சலம், ஊடகத்தில் வெளியிட காரணமாக இருந்த மணிகண்டன் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று மேற்படி மணிகண்டன், சுபாஸ் மற்றும் மருதாச்சலம் ஆகிய மூன்று பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் உத்தரவிட்டுள்ளார்.