காணும் பொங்கலை முன்னிட்டு கோவை குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்.! அருவியில் குளித்து உற்சாக கொண்டாட்டம்

கோவை: கோவையில் காணும் பொங்கலை முன்னிட்டு கோவை குற்றாலம் அருவியில் குவிந்த பொதுமக்கள் அருவியில் குளித்து உற்சாகமாக கொண்டாடினர்.


கோவை: கோவையில் காணும் பொங்கலை முன்னிட்டு கோவை குற்றாலம் அருவியில் குவிந்த பொதுமக்கள் அருவியில் குளித்து உற்சாகமாக கொண்டாடினர்.

 

காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் சாடிவயல் பகுதியிலுள்ள கோவை குற்றாலத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். 

முன்னதாக காலை முதலே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வனத்துறை வாகனங்கள் மூலம் வனப்பகுதியில் அமைந்துள்ள கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, சுற்றுலா பயணிகள் கொண்டுவந்த பை மற்றும் உடமைகளை சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மது, புகையிலை போன்ற போதை பொருட்கள் மற்றும் பிளாஸ்டி போன்ற பொருட்களை

வனத்துறையினர் வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.

 

மேலும், அருவியில் குளிக்கும் இடத்தில் பாதுகாப்பில் இருந்த வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை ஒழுங்குபடுத்தினர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக வனத்துறை ஊழியர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவுறை வழங்கினர். மேலும் வனப்பகுதிக்குள் யாரும் அத்துமீறி நுழைந்திடாமல் இருக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 



இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், காணும் பொங்கலையொட்டி குடும்பத்துடன் அருவிக்கு வந்ததாகவும் வனத்துறையினர் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் எந்த ஒரு இடையூறும் இன்றி அருவிக்கு செல்ல முடிந்ததாகவும் மற்ற சுற்றுலா தலங்களை விட கோவை நகரம் மற்றும் கோவை குற்றாலம் பகுதி தூய்மையானதாக உள்ளதாகவும் தெரிவித்தனர். இதேபோல், கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மைய ஆதியோகி சிலை பகுதியில் கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...