கோவையில் வரும் 19ம் தேதி போலியோ நோய்‌ தடுப்பு சொட்டு மருந்து முகாம் - மாநகராட்சி ஆணையர்‌

கோவை: கோவை மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ வரும் 19ம் தேதி போலியோ நோய்‌ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும்‌ முகாம்கள்‌ நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்தார்.

கோவை: கோவை மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ வரும் 19ம் தேதி போலியோ நோய்‌ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும்‌ முகாம்கள்‌ நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்தார்.

தேசிய போலியோ நோய்‌ ஒழிப்புத்திட்டத்தின்‌ கீழ்‌ கோவை மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ வரும் 19.01.2020(ஞாயிற்றுக்கிழமை) மாநகராட்சியின்‌ சார்பில்‌ போலியோ நோய்‌ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும்‌ முகாம்கள்‌ நடைபெற உள்ளது. இந்த முகாம்‌ காலை 7.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை தொடர்ந்து நடைபெறும்‌. இதற்காக அனைத்து மாநகராட்சி நகர் நல மையங்கள்‌, மருந்தகங்கள்‌, சத்துணவுக்‌ கூடங்கள்‌ மற்றும்‌ மாநகராட்சிப்‌ பகுதியிலுள்ள அனைத்து தனியார்‌ மருத்துவமனைகள்‌ ஆகியவற்றில்‌ அன்று பிறந்த குழந்தைகள்‌ முதல்‌ 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும்‌ இலவசமாக போலியோ நோய்த்தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து வரும்‌ குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும்‌ வகையில்‌ மாநகராட்சி பிரதான அலுவலகம்‌, இரயில்‌ நிலையம்‌, 5 பருந்து நிலையங்கள்‌ மற்றும்‌ 5 நடமாடும்‌ ஊர்திகள்‌ ஆகியவற்றில்‌ சிறப்பு முகாம்கள்‌ அமைக்கப்பட்டுள்ளன.

மாநகரப்‌ பகுதிகளில்‌ அமைக்கப்பட்டுள்ள முகாம்களில்‌ வழங்கப்படவுள்ள போலியோ நோய்‌ தடுப்பு சொட்டு மருந்து முற்றிலும்‌ பாதுகாப்பானது ஆகும்‌. எனவே, கோயம்புத்தூர்‌ மாநகரில்‌ வசிக்கும்‌ அனைத்து பொதுமக்களும்‌ தங்களின்‌ 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும்‌, எந்த விதமான நோய்வாய்ப்பட்டிருந்தாலும்‌, அதனைக்‌ கருத்தில்‌ கொள்ளாமல்‌ தவறாமல்‌ அனைத்து குழந்தைகளுக்கும்‌ போலியோ நோய்த்‌ தடுப்பு சொட்டு மருந்து வழங்கி நமது மாநகராட்சிப்‌ பகுதியிலிருந்து போலியோ நோயினை அறவே ஒழித்திட அனைவரும்‌ ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...