கோவை கோட்டம் சார்பில் பொங்கலுக்கு இயக்கப்பட 1781 சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.3 கோடி வருமானம்

கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) கோட்டம் சார்பில் பொங்கல் பண்டிகைக்கு 1781 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதில் ரூ.3 கோடியே 76 லட்சத்து 86 ஆயிரம் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.


கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) கோட்டம் சார்பில் பொங்கல் பண்டிகைக்கு 1781 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதில் ரூ.3 கோடியே 76 லட்சத்து 86 ஆயிரம் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை, ஈரோடு, சேலம், திருச்சி ஆகிய மண்டலங்களின் சார்பாக பொங்கல் திருவிழாவையொட்டி கடந்த 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

அதில் கடந்த 10ம் தேதி கோவையிலிருந்து 15 சிறப்பு பேருந்துகளும், உதகையிலிருந்து 16 பேருந்துகளும், ஈரோட்டிலிருந்து 27 பேருந்துகளும், திருப்பூரிலிருந்து 10 பேருந்துகளும் என மொத்தம் 68 பேருந்துகள் இயக்கப்பட்டன. 11ம் தேதி கோவையிலிருந்து 28 சிறப்பு பேருந்துகளும், உதகையிலிருந்து 7 பேருந்துகளும், ஈரோட்டிலிருந்து 42 பேருந்துகளும், திருப்பூரிலிருந்து 10 பேருந்துகளும் என மொத்தம் 97 பேருந்துகள் இயக்கப்பட்டன.

12ம் தேதி கோவையிலிருந்து 25 சிறப்பு பேருந்துகளும், உதகையிலிருந்து 20 பேருந்துகளும், ஈரோட்டிலிருந்து 41 பேருந்துகளும், திருப்பூரிலிருந்து 26 பேருந்துகளும் என மொத்தம் 112 பேருந்துகள் இயக்கப்பட்டன. 13ம் தேதி கோவையிலிருந்து 43 சிறப்பு பேருந்துகளும், உதகையிலிருந்து 14 பேருந்துகளும், ஈரோட்டிலிருந்து 65 பேருந்துகளும், திருப்பூரிலிருந்து 15 பேருந்துகளும் என மொத்தம் 158 பேருந்துகள் இயக்கப்பட்டன.

14ம் தேதி கோவையிலிருந்து 391 சிறப்பு பேருந்துகளும், உதகையிலிருந்து 24 பேருந்துகளும், ஈரோட்டிலிருந்து 283 பேருந்துகளும், திருப்பூரிலிருந்து 268 பேருந்துகளும் என மொத்தம் 966 பேருந்துகள் இயக்கப்பட்டன. 15ம் தேதி கோவையிலிருந்து 90 சிறப்பு பேருந்துகளும், உதகையிலிருந்து 51 பேருந்துகளும், ஈரோட்டிலிருந்து 138 பேருந்துகளும், திருப்பூரிலிருந்து 101 பேருந்துகளும் என மொத்தம் 380 பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதன் மூலம் கோவை மண்டலம் ரூ.1 கோடியே 38 லட்சத்து 18 ஆயிரமும், உதகை மண்டலம் ரூ. 42 லட்சத்து 57 ஆயிரமும், ஈரோடு மண்டலம் ரூ. 1 கோடியே 13 லட்சத்து 15 ஆயிரமும், திருப்பூர் மண்டலம் ரூ.82 லட்சத்து 95 ஆயிரம் என மொத்தம் கோலை கோட்டத்தில் 1781 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு அதில் ரூ.3 கோடியே 76 லட்சத்து 86 ஆயிரம் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

மேலும், இன்று முதல் 21ம் தேதி வரை வழக்கம்போல் பொங்கல் பண்டிகையை கொண்டாடி திரும்பி வரும் பயணிகளுக்கு ஏதுவாக சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திருச்சி, தேனி ஆகிய பகுதிகளுக்கும், கோவை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சேலம், சென்னை மார்க்கமாகவும் செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்.

அதே போல் மதுரை, திருச்சி, தேனி, திருநெல்வேலி, நாகர்கோவில், சேலம், சென்னை மற்றும் பிற நகரங்களுக்கும் கோவை கோட்டம் சார்பாக 3000 நடைகள் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...