அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் - காவல் ஆணையாளர்

கோவை: கோவை மாநகரம் முழுவதும் மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின்பேரில் இன்று அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.



கோவை: கோவை மாநகரம் முழுவதும் மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின்பேரில் இன்று அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.



அதிக ஒலி ஏற்படுத்தும் ஏர் ஹாரன்களை வாகனங்களில் பொருத்த தடை விதிக்கபட்டுள்ளது. ஆனால், கோவை மாவட்டத்தில் சட்டவிதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பேருந்துகளிலும், கனரக வாகனங்களிலும் பயன்படுத்தபட்டு வருகிறது.



மேலும், இந்த ஹாரன்களின் சத்தத்தால் வாகன ஓட்டிகள் மாற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சாதாரணமாகவே அதிக ஒலியால் செவித்திறனில் பாதிப்பு ஏற்படும், இதில் 80 டெசிபல் அளவை தாண்டும் ஒலியால் அதிர்ச்சிகளும் இதய நோய்களும் ஏற்படுகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில், கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகனங்கள் மீது மாநகர காவல் ஆணையாளர் சுமித்திரன் உத்தரவின்பேரில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.



இப்படி திருச்சி சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி ஹாரன்களை பயன்படுத்தும் பேருந்துகள் மற்றும் லாரி ஓட்டுனர்களிடம் அபராதமாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து இதுபோன்று விதி மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகர காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...