கோவை: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கோவையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை கைவிட கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை செல்வபுரம் பகுதியில் செல்வபுரம் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, தேசிய கொடிகளுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய சட்டங்களை திரும்ப பெற வேண்டும் எனவும் அதுவரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.