சென்னை : கேளிக்கை என்ற பெயரில் குழந்தைகள், சிறுவர், சிறுமியர் தொடர்பாக, ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில், குறும்புத்தனமான, வீடியோக்களை வெளியிட்டால் ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு, கூடுதல் டி.ஜி.பி., ரவி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு குறைவான சிறுவர், சிறுமியர்கள் தொடர்பான ஆபாச படங்களை, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பார்ப்பது, அதை, 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பரப்புவது, சட்டப்படி குற்றம். மேலும், அது போன்ற படங்கள் மற்றும் வீடியோக்களை, மொபைல் போன், கணினி மற்றும் மடிக்கணினியில் வைத்திருப்பதும் சட்டப்படி குற்றம் என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தோம். இந்த உத்தரவை மீறிய, உடற்பயிற்சி சாதன மொத்த வியாபாரி உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பலரை வலைவீசி தேடி வருவதாக தெரிவித்தார்.
போலீசாரின் நடவடிக்கை காரணமாக, தமிழகத்தில் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் பார்ப்பவர்கள், முற்றிலும் குறைந்து விட்டனர். குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் சிறுமியர் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்ப்பது மட்டுல்ல, அவர்களை கேலி செய்து, குறும்புத்தனமான வீடியோக்களை, ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளத்தில் வெளியிடுவதும் குற்றம். இதுபோன்ற, வீடியோ உருவாக்கத்தில் பின்னணியில் இருப்போர், 'கேமராமேன்' உள்ளிட்ட அனைவருக்கும், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில், 'போக்சோ' சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களை விசாரிக்கும்போது, போலீசார் சீருடை அணிந்திருக்க கூடாது என்றும் சாதாரண உடை அணிந்து தான் விசாரிக்க வேண்டும் என்றவர், குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களை, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அடிப்பது, அவர்களை ஆபாசமாக பேசுவது கூட சட்டப்படி குற்றம். அப்படி இருக்கும்போது, கேளிக்கை என்ற பெயரில், குறும்புத்தனமான வீடியோ வெளியிடுவது, தண்டனைக்குரிய குற்றம். மேலும், ஆண்கள் மற்றும் பெண்கள் கூட, தங்களின் அனுமதி இல்லாமல் குறும்புத்தனமான வீடியோ வெளியிட்டுள்ளனர் என புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.