திருப்பூர்: துக்ளக் ஆண்டு விழாவில் பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ரஜினி அவதூறாக பேசியதாக திராவிடர் விடுதலை கழகம் சார்பில் திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;-
1971ம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் ராமன் சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசியுள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலை பரப்பி அதன் வழியே தமிழகத்தில் பெரியார் மீது மக்கள் கொண்டிருக்கின்ற நல்லெண்ணத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு ரஜினிகாந்த் பேசி உள்ளதாகவும் அது மட்டுமில்லாமல் தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வதந்தியை பரப்பி பொது அமைதியை குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 மற்றும் 505 பிரிவுகளில் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் ரஜினிகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் இன்று திருப்பூர் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.