கோவை: பெரியார் குறித்து அவதூறு மற்றும் வதந்தியை பரப்பி வரும் நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 14ம் தேதி சென்னையில் துக்ளக் இதழின் ஐம்பதாம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் 1971ஆம் ஆண்டில் சேலத்தில் பெரியார் , ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் கொண்டு போனார்கள் என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.
இது திராவிட சிந்தனையாளர்கள் மத்தியில் ரஜினி மீது எதிர்ப்பாக கிளப்பியது.
அதேபோல, சமூக வலைதளங்களில் ரஜினியின் பேச்சில் விஷமம் உள்ளது, எனவும் பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளது எனவும் கண்டனங்கள் கிளம்பியது.
இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் மாநகரத் தலைவர் நேரு தாஸ் இன்று புகார் மனு ஒன்று அளித்தார்.
மேலும், அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது :-
ராமன், சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்து செல்லப்பட்டது என்ற ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் பேசி உள்ளார். இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலை பரப்பி தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வதந்தியை பரப்பி பொது அமைதியை குலைக்கும் வகையில் செயல்படுகிறார்.
ஆகவே, நடிகர் ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 153A மற்றும் 505 OF IPC பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.