வரும் 19ம் தேதி கோயம்புத்தூர் கேரளா சமஜாத்தின் பொன்விழா கொண்டாட்டம்; அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைக்கிறார்

கோவை: கோயம்புத்தூர் கேரள சமஜாத்தின் பொன்விழா கொண்டாட்டங்கள் வரும் 19ம் தேதி சி.எம்.எஸ் பள்ளியில் நடைபெறுகிறது. இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது.


கோவை: கோயம்புத்தூர் கேரள சமஜாத்தின் பொன்விழா கொண்டாட்டங்கள் வரும் 19ம் தேதி சி.எம்.எஸ் பள்ளியில் நடைபெறுகிறது. இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது.

கேரள சமாஜத்தின் தலைவர் வின்சென்ட் லூயிஸ் பேசுகையில், பொன்விழா கொண்டாட்டங்களை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைக்க உள்ளதாகவும் கோயம்புத்தூர் கேரள சமாஜம் 1970ம் ஆண்டு நடிகர் ஜெமினி கணேசனால் தொடங்கி வைக்கப்பட்டதாகவும் இந்த சமாஜத்தில் கேரளாவில் இருந்து வேலை நிமித்தமாகவும், தொழில் மற்றும் வணிக நிமித்தமாகவும் கோவைக்கு குடிபெயர்ந்த கேரள மக்கள் 500க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர் என தெரிவித்தார்.

கோவை மாநகரத்தில் சுமார் 5 லட்சம் பேர் மலையாள மொழி பேசும் மக்கள் உள்ளதாகவும் வரும் 19ம் தேதி கணபதி பகுதியில் உள்ள சி.எம்.எஸ் பள்ளி வளாகத்தில் இந்த விழா நடைபெற உள்ளது எனவும் எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூன், பி.ஆர்.ஜி.அருண்குமார் மலையாள நடிகர்கள் மேகநாதன், சந்தோஷ் நாயர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறினார்.

மேலும், பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டிகள், நடன போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், மருத்துவ உதவிகள், உறுப்பினர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கி முன்னாள் தலைவர்களுக்கு சிறப்பு செய்ய உள்ளதாகவும் இதனை தொடர்ந்து பொன்விழா மலர் வெளியிடப்பட உள்ளது என தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது கேரள சமாஜத்தின் செயலாளர் செபஸ்டியன் ஜோஸ், பொருளாளர் மசூதனன் மற்றும் பொன்விழா நிகழ்ச்சியின் செயலாளர் விசாகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...