மேட்டுப்பாளையத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு உள்ளூர் இளைஞர்கள் பங்கேற்று நடித்த இரணிய நாடகம் தெருக்கூத்து..! விடிய விடிய கண்டுகளித்த பொதுமக்கள்

கோவை: மேட்டுப்பாளையம் அருகே 300 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக உள்ளூர் இளைஞர்களே பங்கேற்று நடிக்கும் இரணிய நாடகம் தெருக்கூத்து பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு விடிய விடிய நடைபெற்றது.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே 300 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக உள்ளூர் இளைஞர்களே பங்கேற்று நடிக்கும் இரணிய நாடகம் தெருக்கூத்து பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு விடிய விடிய நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ளது பகத்தூர் மற்றும் வெள்ளிக்குப்பம்பாளையம் கிராமம். இங்குள்ள கிராம மக்களால் தான் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக கலாச்சார வாழ்க்கை நாடகமாக இருந்து வந்த இந்த பாரம்பரிய தெருக்கூத்து நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது

இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் முதல் நாள் மற்றும் மாட்டு பொங்கல் தினத்தன்று என இரவு முதல் அடுத்த நாள் காலை வரை இடைவிடாது தொடர்ந்து விடிய விடிய இரணிய நாடகா சபா சார்பில் தெரு கூத்து நாடகம் நடைபெற்றது. 



கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு பகத்தூர் மற்றும் வெள்ளிக்குப்பம் பாளையம் கிராம மக்கள் பிளேக் நோய் தாக்கம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் இருந்து விடுபட இரணிய நாடகம் அரங்கேற்றப்பட்டதாகவும் அதன் மூலம் பொதுமக்கள் நோய்களில் இருந்து விடுபட்டதை தொடர்ந்து அன்று முதல் இன்று வரை இந்த கிராம மக்களால் தொடர்ந்து ஒரு நம்பிக்கையாக இந்த இரணிய நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. 

முழுக்க முழுக்க உள்ளூர் இளைஞர்கள் மட்டுமே பங்கேற்று இந்த கதையம்சத்தில் வரும் கதாபாத்திரங்களை ஏற்று வேடமிட்டு நடித்து வருகின்றனர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று மாறு வேடமிட்டு புராண கதாபாத்திரங்களின் பாடல்களை பாடியும் தத்ரூபமாக நடித்து அசத்தினர். 



இந்த இரணிய நாடகத்தை காண இந்த கிராமத்தில் இருந்து மட்டுமின்றி அருகில் உள்ள கிராமத்தினரும் வருகை தந்து இரவு முழுவதும் காத்திருந்து பக்த பிரகலாதன் நாடகத்தை கண்டு ரசித்தனர். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...