மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு சிறப்பு பொங்கல் வைத்து யானை பொங்கல் விழா கொண்டாட்டம்

கோவை: மாட்டு பொங்கல் தினத்தை கொண்டாடும் விதமாக மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு சிறப்பு பொங்கல் வைத்து யானை பொங்கல் விழா நடைபெற்றது

கோவை: மாட்டு பொங்கல் தினத்தை கொண்டாடும் விதமாக மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு சிறப்பு பொங்கல் வைத்து யானை பொங்கல் விழா நடைபெற்றது

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 15ம் துவங்கி நடைபெற்று வருகின்றது. 28 யானைகள் கலந்து கொண்டு உள்ள இம்முகாமில் யானைகளுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்று யானைகள் நலவாழ்வு முகாமில் மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு முகாமில் உள்ள யானைகளுக்கு யானை பொங்கல் வைத்து, விழாவினை அதிகாரிகள் மற்றும் யானை பாகன்கள் உற்சாகமாக கொண்டாடினர். 



யானைகள் பவானி ஆற்று நீரில் புனித நீராடி முகாமில் உள்ள விநாயகர் கோவில் முன்பாக வரிசையாக நிறுத்தப்பட்டு யானைகளுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவித்து பாகன்களுக்கு புத்தாடையும் வழங்கி அர்ச்சகர்களைக் கொண்டு கஜ பூஜை நடைபெற்றது.



தொடர்ந்து புது பானையில் பச்சரிசி வெல்லம் இட்டு பொங்கல் வைக்கப்பட்டு பொங்கல் பொங்கி வந்த போது யானைகள் பிளிரி சத்தமிட்டு பொங்கலை உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர். 



இதனை தொடர்ந்து யானைகளுக்கு சர்க்கரை பொங்கல், கரும்பு, வாழை பழங்கள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு யானை பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த யானை பொங்கல் முகாமை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகளும் கண்டு மகிழ்ந்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...