திருவள்ளுவர் தினம்: வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் திருக்குறளில் உள்ளது - வானதி சீனிவாசன்

கோவை: கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் மேற்கு இணைந்து திருவள்ளுவர் தின திருவிழாவை நடத்தினர்.

கோவை: கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் மேற்கு இணைந்து திருவள்ளுவர் தின திருவிழாவை நடத்தினர். 



"திருக்குறளை சேமிப்போம்" என்ற தலைப்பில் நடந்த

நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 



இந்த நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துக்கொண்டு திருக்குறளை கூறி அசத்தினர்.

பங்குபெற்ற, அனைத்து குழந்தைகளுக்கும் உண்டியல் பரிசாக வழங்கப்பட்டது.



நிகழ்ச்சியில் பேசிய வானதி சீனிவாசன், "திருக்குறள் தமிழர்களின் அடையாளம். வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் திருக்குறளில் உள்ளது. சமஸ்கிருதத்தை விட மிக பழமையான மொழி தமிழ் என்று நம் பாரத பிரதமரே கூறியுள்ளார். மேலும், தமிழை கற்க ஆர்வமாக உள்ளதாக பிரதமர் கூறியிருக்கிறார். தாய் மொழி கண்களை போன்றது. மற்ற மொழிகள் கண்ணாடி போன்றது. தாய் மொழியின் பெருமையை பெற்றோர் கற்று தர வேண்டும். குழந்தைகளுக்கு வாழ்க்கையில் நேர்மையை கற்றுக்கொடுங்கள்", என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஜெர்மன் மற்றும் பிரேசிலை சேர்ந்த மாணவர்கள் ஜூலியன், பவுத்திசான், கிளாஸ் ஆகியோர் திருக்குறள் கூறி வானதி சீனிவாசனிடம் இருந்து உண்டியலை பரிசாக பெற்றனர்.

ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் மேற்கு தலைவர் ஜெயகாந்தன், செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...