திருப்பூர்: தமிழக பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றானது கும்மியாட்டம். கொங்கு நாட்டு பகுதிகளில் சங்ககாலத்தில் அனைத்து விழாக்காலங்களிலும் மங்களகரமாக ஆடப்பட்டு வந்தது. நாளடைவில் கும்மியாட்டத்திற்கான ஆர்வம் குறைய ஆரம்பித்தது. எனவே, கும்மியாட்டத்தை உயிர்ப்பிக்கும் வகையில் திருப்பூரில் பவளக்கொடி கும்மியாட்ட குழுவினர் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

குழுவின் ஆசிரியர் விஸ்வநாதன் ஐந்து முதல் சிறுமி ஐம்பது வயது மகளிர் வரை அனைவருக்கும் கும்மியாட்ட பயிற்சி அளித்து வருகின்றார். திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகளில் ஆடி கும்மியாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் அடுத்துள்ள நல்லூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் பவளக்கொடி கும்மி குழுவினர் ஒரே வண்ண ஆடை உடைணிந்து சிறுவர் முதல் பெரியவர் வரை நாட்டு பாடலுக்கு கும்மியாட்டம் ஆடி அசத்தினர். ஏராளமானோர் இதனை கண்டு களித்தனர்.