திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே பஞ்சு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கவுண்டம்பாளையம் நால்ரோடு பகுதியில் செந்தில் என்பவருக்கு சொந்தமான பஞ்சு குடோன் உள்ளது.இங்கு காடா துணி மற்றும் துணியிலிருந்து பஞ்சு தயாரிப்பதற்கான இயந்திரம் உள்ளிட்டவை வைத்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கவுண்டம்பாளையம் நால்ரோடு பகுதியில் செந்தில் என்பவருக்கு சொந்தமான பஞ்சு குடோன் உள்ளது.இங்கு காடா துணி மற்றும் துணியிலிருந்து பஞ்சு தயாரிப்பதற்கான இயந்திரம் உள்ளிட்டவை வைத்துள்ளனர். 



நேற்று பொங்கல் பண்டிகை என்பதால் குடோனுக்கு விடுமுறை அளித்துள்ளதால் தொழிலாளர்கள் யாரும் இல்லாத சூழ்நிலையில் திடீரென குடோனில் இருந்து புகை வந்துள்ளது இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் தீயணைப்புத் துறையினர் வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.



இந்த தீ விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆகியன இந்த தீ விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...