கோவை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு 97 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது - மாவட்ட வழங்கல் துறை அதிகாரி

கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை 9,41,238 லட்சம் ரேசன் கார்டுகளுக்கு, 1418 ரேசன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை 9,41,238 லட்சம் ரேசன் கார்டுகளுக்கு, 1418 ரேசன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு, 1000 ரூபாய் மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் பொங்கல் தொகுப்பாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

கோவை மாவட்டத்தில், விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் 6 லட்சத்து 88 ஆயிரத்து 923 பயனாளிகளுக்கு விலையில்லா சேலைகளும், 6 லட்சத்து 84 ஆயிரத்து 468 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டிகளும் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு பொருட்கள் 21ம் தேதி வரை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கூட்ட நெரிசலை தவிர்த்திடும் பொருட்டு அனைத்து விதமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் எவ்வித தடங்கலின்றி பொங்கல் பரிசு பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். 

மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 41 ஆயிரத்து 238 ரேசன் கார்டுகளுக்கு அதாவது 97 சதவீதம் பேருக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன, என்றார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...