மேட்டுப்பாளையம் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்; பார்வையாளர்களை கவர்ந்த `பாப்' கட்டிங்' செங்கமலம் யானை

கோவை: மேட்டுப்பாளையம் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் தலை முடியை சிகை அலங்காரம் செய்து மண்ணார்குடி கோபாலசுவாமி யானை செங்கமலம் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

கோவை: மேட்டுப்பாளையம் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் தலை முடியை சிகை அலங்காரம் செய்து மண்ணார்குடி கோபாலசுவாமி யானை செங்கமலம் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றுப் படுகையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 12வது யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் கடந்த மாதம் 15 ந் தேதி தொடங்கி தேக்கம்பட்டியில் நடைபெற்று வருகின்றது.

இந்த முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த திருக்கோவில் மற்றும் திருமடங்களை சேர்ந்த 28 யானைகள் முகாமில் பங்கேற்று புத்துணர்வு பெற்று வருகின்றன. யானைகளை பராமரிக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட சில யானைகள், முகாமில் உள்ள மற்றவர்களையும் பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.



அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் மண்ணார்குடி கோபாலசுவாமி யானை செங்கமலம் தனது நீண்ட கூந்தலால் அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. 12வது ஆண்டாக மேட்டுப்பாளையம் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் கலந்து கொண்டுள்ள இந்த யானைக்கு மட்டுமே தமிழ்நாட்டிலேயே வேறு எந்த யானைக்கும் இல்லாத அளவுக்கு மிக நீண்ட கூந்தலை கொண்டுள்ளது என்ற சிறப்பினை பெற்றுள்ளது.



இதற்காக யானையின் பாகன் சிறப்பு கவனம் எடுத்து யானையின் கூந்தலை பராமரிக்க தனி கவனம் செலுத்தி வருகிறார். யானையை குளிக்க வைக்கும் போது அதன் முடியை பராமரிக்க பெண்கள் பயன்படுத்துவது போல் சீகைக்காய், மருதாணி, ஆர்காணிக் சேம்பு(Shampoo) போன்ற பொருட்களை பயன்படுத்தி சுமார் எட்டு ஆண்டுகளாக யானையின் கூந்தலை பராமரித்து வருகிறார்.

பொதுவாக யானைகளுக்கு கூந்தல் என்பது மிகவும் அரிது, ஒரு சில யானைகளுக்கு மட்டுமே அதுபோன்ற கூந்தல் வரும். அவ்வாறு வரும் கூந்தலை தனிக்கவனம் செலுத்தி பராமரித்து சுமார் மூன்று அடிக்கும் மேல் வளரும் வகையில் பராமரித்து வருகிறார் யானை பாகன் ராஜகோபால். இதன் காரணமாக முகாமில் 28 யானைகள் இருந்தாலும் செங்கமலம் யானை தனி கவனத்தைப் பெற்றுவருகிறது. அத்துடன் யானைகள் முகாமினை காணவரும் பார்வையாளர்களையும் குழந்தைகளின் கவனத்தையும் ஈர்க்கும் செங்கமலம் பாப் கட்டிங் யானை என்ற செல்ல பெயரையும் பெற்று வருகிறது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...