நீலகிரி: குன்னூர் எடப்பள்ளி கிராமத்தில் காலில் குழாய் மாட்டி காயங்களுடன் உயிருக்கு போராடிய காட்டெருமையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.
நீலகிரி: குன்னூர் எடப்பள்ளி கிராமத்தில் காலில் குழாய் மாட்டி காயங்களுடன் உயிருக்கு போராடிய காட்டெருமையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக காட்டெருமை, கரடி, சிறுத்தை, யானை போன்ற விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது வாடிக்கையாகி உள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக காட்டெருமை ஒன்று வலது காலில், குழாய் ஒன்று கால் இடையில் மாட்டிக் கொண்டு காயத்துடன் எடப்பள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சுற்று திரிந்தது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் உதவி வனப்பாதுகாவலர் சரவணன் தலைமையில் உதவி கால்நடை மருத்துவ கோச்சாலன் வரவழைக்கப்பட்டு துப்பாக்கி மூலமாக மயக்க ஊசி செலுத்தி மயக்கமடைந்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.