கோவை: ஜி.எஸ்.டி.வரி ஏய்ப்பு மூலம் அரசுக்கு ரூ.40 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொழிலதிபர் ஒருவரை கோவை ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரித்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவையில் செயல்பட்டு வரும் அலியா என்டர்ப்ரைசஸ், விநாயக் டிரேடிங், ஸ்டார் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் போலியாக இன்வாய்ஸ், இ-வே பில் ஆகிய ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்ததாக போலி கணக்கு காட்டி, அதற்கு அரசு அளிக்கும் வரி சலுகை (input credit) பெற்றதாக வழக்குப்பதிவு செய்து முகம்மது அரிப் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ரூ.5 கோடி செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதில், ரூ.3 கோடி செலுத்தாமல் தாமதப்படுத்தியதை அடுத்து, ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரித்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.