மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம்; தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் - நாகை திருவள்ளுவன்

கோவை: மேட்டுபாளையம் நடூரில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றவில்லை எனில் மீண்டும் நடூர் பகுதிக்கு சென்று மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என தமிழ் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் தெரிவித்தார்.

கோவை: மேட்டுபாளையம் நடூரில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றவில்லை எனில் மீண்டும் நடூர் பகுதிக்கு சென்று மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என தமிழ் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடத்த டிசம்பர் 2ம் தேதி சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் போராட்டம் செய்ததற்காக தமிழ் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நாகை திருவள்ளுவன் கைதிற்கு எதிராக பல இடங்களில் பேருந்துகள் தாக்கப்பட்டது. அந்த வழக்குகளிலும் நாகை திருவள்ளுவன் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், 43 நாட்கள் சிறை வாசத்திற்குப் பின்னர் இன்று காலை நாகை திருவள்ளுவன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். கோவை மத்திய சிறை வாசலில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழ் புலிகள் கட்சியினர் நாகை திருவள்ளுவனுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாகை திருவள்ளூவன், கடந்த டிசம்பர் 2ம் தேதி மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்தை காவல்துறை ஒரு விபத்து போல சித்தரித்தது எனவும் ஆனால், தீண்டாமை சுவரால்தான் அந்த விபத்து ஏற்பட்டது என தெரிவித்தார். மேலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் எங்களை போன்றவர்கள் மீது மாநில அரசு பொய் வழக்குபதிவு செய்து அடக்குவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் எனவும் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் நடந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் இல்லையெனில் மீண்டும் நடூர் பகுதிக்கு சென்று மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...