திருப்பூர்: திருப்பூரில் இருந்து சபரிமலைக்கு சென்ற சிகரங்கள் அறக்கட்டளை அமைப்பாளர்களில் ஒருவரான சண்முகசுந்தரம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் வேலம்பாளையம் சேர்ந்தவர், சண்முகசுந்தரம் (32). சிகரங்கள் அறக்கட்டளை அமைப்பாளர்களில் ஒருவரான சண்முகசுந்தரம் மரக்கன்று நடுதல், ரத்ததான முகாம் நடத்துவது போன்ற சமூக பணிகளில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டவர். திருப்பூரில் பனியன் ஜாப் ஒர்க் நிறுவனம் நடத்தி வந்த இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சபரிமலைக்கு சென்றார்.
அப்போது, எருமேலி எனும் பகுதியை கடந்து போகும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சிகரங்கள் அறக்கட்டளையின் அமைப்பாளரான இவர் பல மனிதர்களுக்கு ரத்தம் தேவை என்ற நேரத்தில் தாமாக முன்வந்து நண்பர்களை ஒருங்கிணைத்து உதவி இவரின் இழப்பு தொழில்துறையினர், இயற்கை ஆர்வலர்கள் என அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.