கோவை: கோவை அடுத்த சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் வாகனம் மோதி சிறுத்தை பலியான சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை அடுத்த சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் வாகனம் மோதி சிறுத்தை பலியான சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த மலைப்பாதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பண்ணாரி வனத்தில் அமைந்துள்ளது. இந்த மலைப்பாதையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்த வனத்தில் சிறுத்தை, யானைகள், கரடிகள் என ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை அடிக்கடி உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், இன்று காலை திம்பம் மலைப்பாதை 11வது கொண்டை ஊசி வளைவில் சுமார் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுத்தைப்புலி ஒன்று உயிரிழந்தது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த சிறுத்தைப்புலியை மீட்டு வன கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர் உடற்கூறு ஆய்வு செய்தபோது வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்