வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

கோவை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படும் நிலையில், வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கோவை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படும் நிலையில், வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் 1100 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் பொங்கல் விழாவை சமத்துவ பொங்கலாக கொண்டாடினர். மாணவ மாணவிகள் தமிழ் பண்பாட்டை வலியுறுத்தும் விதமாக வேட்டி சேலை அணிந்து வந்தனர்.



கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வகுப்புகள் வாரியாக மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து மைதானத்தில் கோலமிட்டு கரும்பு, மஞ்சள் பலூன் தோரணங்களோடு பொங்கல் வைத்தனர். முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் பொன் முத்துராமலிங்கம் பொங்கல் பானையில் அரிசியை இட்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.



இதனையடுத்து, மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் பொங்கல் படைத்து வழிபட்டனர். தொடர்ந்து, மாணவ மாணவிகள் மேளதாள வாத்தியங்கள் முழங்க நடனமாடி மகிழ்ந்தனர். படைக்கப்பட்ட பொங்கலை சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். இந்த விழாவில் ஏராளமான மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கு பெற்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...