குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக்கண்காட்சியை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடவுப்பணி இன்று தொடக்கம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக்கண்காட்சி மே மாதம் நடைபெறுவதை முன்னிட்டு 2 லட்சத்து 60 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவுப்பணி இன்று தொடங்கியது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக்கண்காட்சி மே மாதம் நடைபெறுவதை முன்னிட்டு 2 லட்சத்து 60 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவுப்பணி இன்று தொடங்கியது.



குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 62 பழக்கண்காட்சி நடைபெறுவதை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடவு பணியை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் பபிதா இன்று தொடங்கி வைத்தார். இதில் பெடுனியா, ஆன்டிரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், பேன்சி, சால்வியா, அலிசம், ஜினியா, மேரி கோல்டு, பிரஞ்ச் மற்றும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்கு டேலியாவில், லட்சுமி பாலா, சச்சின், இந்திரா உள்ளிட்ட 110 வகையான உள்ளுர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டு சிம்ஸ் பூங்காவில் 2 லட்சத்து 60 ஆயிரம் மலர் செடிகளை தொட்டியிலும், பூங்காவிலும் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நடவு பணிக்காக முதன் முறையாக அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் 84 பேர் நடவு பணியில் ஈடுபட்டனர். இந்த பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் செடிகள் மே மாதத்தில் நடைபெறும் பழக்கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...