நீலகிரி: கூடலூர் காரமூலா கிராமத்தில் வசிக்கும் குறும்பர் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் மற்றும் அடிப்படை வசதிகளை அமைத்துத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கூடலூர் பகுதியில் பிதரகாடு அருகே உள்ள காரமூலா கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குறும்பர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால் அரசு வழங்கும் உதவி திட்டங்களைப் பெற முடிவதில்லை எனவும் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், இக்கிராமத்தில் சாலை வசதிகள் முறையாக இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு வனப்பகுதியை கடந்து, நடந்து செல்ல வேண்டி சூழ்நிலை உள்ளதாகவும், இதனால் மாணவர்களுக்கு கடும் சிரமம் ஏற்படுவதாகவும், அவசர காலங்களில் தங்கள் கிராம பகுதிக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரமுடியாத சூழ்நிலை உள்ளதாகவும் தங்கள் கிராம பகுதிக்கு சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் சாதி சான்றிதழ்கள் வழங்க கோரியும் ஐம்பதிற்கும் மேற்பட்ட குறும்பர் பழங்குடியின மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.