டிக் டாக் செயலியை தடை செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருப்பூர்: சமூக சீரழிவிற்கு காரணமான டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது


திருப்பூர்: சமூக சீரழிவிற்கு காரணமான டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது 16 வயது மகள் திவ்யாவுடன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பல்லடம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் டிக் டாக் மூலம் அறிமுகப்படுத்திக்கொண்டு பழகியுள்ளார். டிக் டாக் செயலியில் அறிமுகமான அவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதில் ஆறுமுகத்தின் மகள் திவ்யா இரண்டு மாத கர்ப்பம் ஆகியுள்ளார். வெளியே தெரிந்தால் அவமானம் என்று கடந்த டிசம்பர் மாதம் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.



இதனையடுத்து, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 27ம் தேதி அவர் உயிரிழந்துள்ளார். இந்த வழக்கில் வேல்முருகன் மகளிர் காவல் துறையினரால் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து செய்யப்பட்டுள்ளான். இருப்பினும் வேல்முருகன் பிணையில் வெளிவர முடியாதபடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சமூக சீரழிவிற்கு காரணமான டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...